உலக அறிவியல் துறை சார்ந்த பொதுத் தகவல்களை உள்ளடக்கிய அல்லது ஒரு குறிப்பிட்ட சிறப்புத் துறை சார்ந்த முக்கிய பொதுத்தகவல்களை வழங்குகின்ற, விளக்கக் கட்டுரைகளை முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கில் தருகின்ற ஆக்கம். காலங்காலமாக மனிதனது அறிவுத் தேடலும்; ஆன்மமுயற்சியும் உடலுழைப்பும் இணைந்து சாதிக்கப்பட்டவைகளை எழுத்துவடிவில் ஒன்றுதிரட்டித் தரும் ஒரு நோக்கு நூலே கலைக்களஞ்சியமாகும். மானுட வரலாற்றின் கூறுகள் அனைத்தையும் ஓரிடத்தில் பார்த்து அறிந்துகொள்ளும் வாய்ப்பை இந்நூல் தருகிறது. கலைக்களஞ்சியம் என்ற சொல்லானது அதன் நீண்டகால வரலாற்றில் கணிசமானளவு மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. தற்காலத்தில் பெரும்பாலானோருக்கு கலைக்களஞ்சியம் என்பது உலக அறிவின் தொகுப்பைப் பல பகுதிகளாகக் கொண்டு படங்கள், சொல்லடைவுகள் என்பவற்றை உள்ளடக்கி நூல்விவரப் பட்டியல்கள், விளக்கப் படங்கள், புவியியல் விவரங்கள், சுருக்க விளக்கங்கள் என்பனவற்றையும் ,ணைத்து வெளிவரும் நூலாகக் கருதப்படுகிறது. ஆனால் ,வை அனைத்தையும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கொண்டு தனிநபரால் தொகுக்கப்பட்ட ஒருதொகுதிக் கலைக்களஞ்சியம் முதற்கொண்டு ஆயிரக்கணக்கான பங்களிப்பாளர்களின் உதவியுடன் உருவாக்கப்படும் பலதொகுதிக் கலைக்களஞ்சியம் வரை இன்றைய நூலகங்களை அலங்கரிக்கின்றன. வெளியிடப்பட்ட ,இடம், காலம், என்பவற்றுக் கமைய அறிவின் உள்ளடக்கப் பரப்பானது வேறுபடுகிறது. விளக்கப்படங்கள், தேசப்படத் தொகுதிகள், நூல்விவரப் பட்டியல்கள் என்பன பல கலைக்களஞ்சியங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. உயிருடன் ,ருக்கும் நபர்களின் வாழ்க்கை வரலாறுகள் பொதுவாகச் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. சொல்லடைவுகளும் அண்மைக் காலத்திலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றன. கி.மு 339 அளவில் வாழ்ந்தவராகக் கருதப்படும் பிளேட்டோவின் மருமகளான Speusippus என்பவரால் வரலாறு, தத்துவம், கணிதம் போன்றவை தொடர்பாக அவரது மாமனது சிந்தனைகள் தொடராக எழுதப்பட்டுத் தொகுக்கப்பட்டதை கலைக்களஞ்சிய வரலாற்றின் ஆரம்பப் படிகள் எனக் கருத இடமுண்டு. அதேபோன்று அரிஸ்ரோட்டலினால் பரந்தளவில் மேற்கொள்ளப்பட்ட தொடர் விரிவுரைகளுக்கும் கலைக் களஞ்சியப் பண்பு உண்டு. கலைக்களஞ்சிய வரலாற்றின் மூலகர்த்தாக்களாக இவர்கள் இருவரையும் கொள்ளமுடியும்.
கிரேக்கர்களின் அணுகுமுறை பேசப்பட்ட சொற்களைப் பதிவு செய்வதாக இருந்த அதேசமயம் ரோமர்களின் முயற்சியோ நிலைகொண்டிருந்த அறிவை வாசிக்கக்கூடிய வடிவத்தில் பதிவு செய்வதாக இருந்தது. உரோமர்களின் பங்களிப்பில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது கி.பி 23-79 காலப்பகுதியில் வாழ்ந்த Plinty என்பவரின் Historia naturalis என்ற பகுப்பாக்க ரீதியிலான தகவல் தொகுப்பாகும். கிட்டத்தட்ட 1500 வருடங்கள் வரை ஏனைய கலைக்களஞ்சியங்களுக்கான பிரதான மூலமாக இது பயன்பட்டிருக்கிறது. இன்றுங்கூட உரோமானிய, சிற்ப, ஓவிய தகவல்களுக்கான முக்கிய பதிவேடாக இது கருதப்படுகிறது. 100 படைப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கிட்டத்தட்ட 20,000 தகவல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. கிரேக்க உரோமானிய கலைக்களஞ்சியங்கள் உலக அறிவை அறிவியல், வாழ்வியல் என இரண்டாக வகைப்படுத்தி, வானவியல், புவியியல் தொடர்பான தகவல்களை அறிவியலின் கீழும், நுண்கலைகளை வாழ்வியலின் கீழும் வகைப்படுத்தின. அரபுக் கலைக்களஞ்சியங்களும், இடைக்கால ஐரோப்பிய கிறிஸ்தவ அறிஞர்கள் தயாரித்த கலைக்களஞ்சியங்களும் கடவுள், படைப்பு, மனிதன், மொழிகள், ஒழுக்கம், தொழில்கள் என்ற வரிசையில் ஒழுங்குபடுத்தின. இந்தப் பழைய அமைப்பை மாற்றி முதன்முதலில் அறிவியல் அடிப்படையில் புறஇயற்கை மனிதன், மனிதனால் உருவாக்கப்பட்ட புற இயற்கை எனப் பாகுபடுத்தி கலைக்களஞ்சியங்களின் அமைப்பைப் புதுப்பித்த பெருமை 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்ஸிஸ் பேக்கன் என்ற அறிஞரையே சாரும். பொருட் கலைக்களஞ்சிய உருவாக்கம் இவருடனிருந்தே ஆரம்பிக்கிறது. வாசகரின் இலகுவான பயன்படுத்துகையைக் கருத்தில் கொண்டு தகவலை அகரவரிசையில் ஒழுங்குபடுத்திய முதலாவது கலைக்களஞ்சியம் 11ம் நூற்றாண்டில் தோன்றிய Suidas கலைக்களஞ்சியமாகும். பொருட்பாகுபாடே சிறந்தது என்ற கருத்து நிலைகொண்டிருந்தபோதும் இன்றுவரை அகர வரிசையே முதன்மையாக உள்ளது. தமிழ்க் கலைக்களஞ்சியத்திலும் தொல்காப்பிய கால நெடுங்கணக்குமுறையில் அகர வரிசை பின்பற்றப்பட்டபோதும்கூட ஒன்றிற்கு மேற்பட்ட பொருள்களை ஆழமாக விளக்குமிடத்து பொருட்பாகுபாட்டு முறையே பின்பற்றப்பட்டது. 1594ல் தோன்றியதாகக் கருதப்படும் இரவேண சித்தரின் அகராதி நிகண்டில் தான் தமிழில் அகரவரிசை முதன்முதலில் பின்பற்றப்பட்டது.
கலைக்களஞ்சியங்கள் பருமன், வியாபகத்தன்மை, வாசகரின் தன்மை என்பவற்றுக்கமைய வகைப்படுத்தப்படுகின்றன. கலைக்களஞ்சியங்கள் அவற்றின் பருமனின் அடிப்படையில் 200 பக்கங்கள் கொண்ட ஒருதொகுதிக் கலைக்களஞ்சியம் முதல் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட பலதொகுதிக் கலைக்களஞ்சியங்கள் வரை பலதரப்பட்டதாக அமைகின்றன. வியாபகத் தன்மையின் அடிப்படையில் கலைக்களஞ்சியங்களை பொதுக் கலைக்களஞ்சியம், பொருட் கலைக்களஞ்சியங்கள் என இருவகைப்படுத்தலாம். வாசகரின் பயன்பாட்டின் அடிப்படையில் கலைக்களஞ்சியங்கள் குழந்தைகள் கலைக்களஞ்சியங்கள், இளையோர் கலைக்களஞ்சியங்கள், வளர்ந்தோர் கலைக்களஞ்சியங்கள் என அமைகின்றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சார்ந்த பின்னணித் தகவல்களை வழங்குதல், குறிப்பிட்ட காலப்பகுதி தொடர்பான ஒரு கருத்தைப் பெற உதவுதல், குறிப்பிட்ட பொருள் தொடர்பாக பலதரப்பட்டோரின் வௌ;வேறு அணுகுமுறைகளை அறிய உதவுதல், போதியளவு விளக்கப்படங்கள், புள்ளிவிவரங்கள் என்பவற்றைத் தருதல், குறிப்பிட்ட துறை சார்ந்த முழுமையான நூல்விவரப் பட்டியலை அறிய உதவுதல் போன்றன ஒரு கலைக்களஞ்சியத்தால் பெறப்படுகின்ற பயன்பாடுகளாகும்.
கலைச்சொற்றொகுதி (Glossary)
குறிப்பிட்ட பொருள் சார்ந்த முக்கிய சொற்களைத் தொகுத்து சில சமயம் அச்சொற்களுக்கான சுருக்க வரைவிலக்கணத்தையும் உள்ளடக்கி அகரவரிசையில் உருவாக்கப்படும் அகராதிகள். இவை ஒருமொழி சார்ந்ததாகவோ அல்லது இரு மொழி சார்ந்ததாகவோ இருக்கும். எ-டு ALA Glossary of Library Terms – ஒரு மொழி. தமிழ் ஆங்கில கலைச்சொற்றொகுதி - சமூக விஞ்ஞானம். « வரைவில் சேர்க்கை அகராதி
களிமண் பலகை (Clay Tablet)
புராதன மெசப்பத்தேமியாவின் பாபிலோனிய, அசிரிய, பாரகீக மக்களால் பயன்படுத்தப்பட்ட ஆப்பு வடிவ எழுத்துமுறையைப் பின்பற்றி மெல்லிய சிறிய ஈரமான களிமண்ணில் கூரான ளவலடரள எனப்படும் மெல்லிய கூரான எழுத்தாணி கொண்டு பதியப்பட்டது. இவை வேகவைத்துக் கடினமாக்கப்பட்டன. களிமண் பலகைகளின் தோற்றம் கி.மு 4000 ஆண்டளவில் சுமேரியர் காலத்துடன் தொடங்குகின்றது. குகை ஓவியங்களிலிருந்து ஏற்பட்ட அடுத்த வளர்ச்சிப்போக்காக இது கருதப்பட்டது. ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் காவிச் செல்வதற்கு ஏற்ற வகையிலும், ஓரிடத்தில் சேகரித்து வைக்கப்படக்கூடியதாகவும் உருவாக்கப்பட்ட முதலாவது மனித சிந்தனைப்பதிவேடாக இது காணப்படுகின்றது. ஈரமான களிமண்ணைத் தட்டையாக்கி கூரான தடி கொண்டு முக்கோண வடிவங்களில் குறியீடுகளாகத் தகவல்கள் பதியப்பட்டு இது வேகவைத்துக் கடினமாக்கப்பட்டது. சால்டியா, சிரியா நாடுகளில் களிமண் எழுதப்படும் பொருளாக இருந்திருக்கிறது. களிமண் பலகையில் எழுதப்பட்ட எழுத்துகள் கூனிபார்ம் எழுத்துக்கள் எனப்பட்டன இங்கிலாந்திலுள்ள பிரிட்டிஸ் அரும்பொருளகத்தில் இவை இருப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகின் முதற் காவியம் எனக் கருதப்படும் கில்கமேஷ் காவியம் களிமண் தட்டில் படைக்கப்பட்டது என்பதையும் கி.மு 669-626 காலப்பகுதியில் ஆட்சிபுரிந்த அசிரிய மன்னன் அசர் பனிபல்லினால் நினவே என்னுமிடத்திலுள்ள அவனுடைய அரண்மனையில் இவை சேகரிக்கப்பட்டன என்பதையும் இங்கு கிட்டத்தட்ட 22,000 களிமண் தட்டுகள் பொருள்வாரியாகப் பிரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டிருந்தன என்பதையும் அகழ்வாராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. மனித வரலாற்றின் முதலாவது நூலகமாக இது கருதப்பட இடமுண்டு. வைசாலிக் குடியரசின் பிரதம சேனாதிபதி சிம்மனது வாழ்க்கை வரலாற்றை எடுத்துச் சொல்லும் சிந்து முதல் கங்கைவரை என்ற நூல் நூலாசிரியர் ராகுல சாங்கிருத்தியாயனின் சொந்த முயற்சியில் அகழ்வாராய்ச்சி செய்து கண்டபிடிக்கப்பட்டு இந்தியாவின் பாட்னா அரும்பொருளகத்தில் வைக்கப்பட்டிருக்கும் 1600 செங்கற்களிலிருந்து உருவாக்கப்பட்டதே என அந்நூலின் முன்னுரையில் அதன் படைப்பாளர் ராகுல சாங்கிருத்தியாயன் குறிப்பிடுகின்றார். « தகவல் வளங்கள், எழுது பொருட்கள்
No comments:
Post a Comment