Sunday, October 26, 2014

காங்கிரஸ் நூலகப் பகுப்பாக்கம் ((Library of Congress Classification)
அமெரிக்க தேசிய நூலகத்தில் உள்ள ஆவணங்களைப் பகுப்பாக்கம் செய்வதற்கு வடிவமைக்கப்பட்டதும், காங்கிரஸ் நூலகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செயல்துறைப் பயன்நாட்டமுடைய அணுகுமுறையைக் கொண்டதுமான பகுப்பாக்கத் திட்டம். ஆங்கில எழுத்துக்களைக் கொண்ட பின்வரும் 20 முதன்மை வகுப்புகளை இது கொண்டது. A – பொது, B  – தத்துவம், உளவியல், சமயம், C – வரலாறு, தொல்லியல்,  D -  வரலாறு (ஆசியா, ஐரோப்பா), E-F – வரலாறு(அமெரிக்கா),  G – புவியியலும் மானுடவியலும், H – சமூக அறிவியல்கள்,  J - அரசியல், K – சட்டம், L – கல்வி, M - இசை, N - நுண் கலைகள், P – மொழியும் இலக்கியமும், Q –அறிவியல்,  R – மருத்துவம், S – விவசாயம், T – தொழில்நுட்பம், U - இராணுவ அறிவியல், V -  கப்பற்துறை அறிவியல்,  Z – நூல், நூலகவியல், நூல்விவரப் பட்டியல்.

No comments:

Post a Comment