Sunday, October 26, 2014


கான்ட்' இன் பகுப்பாக்கம்(KANT`S Classification):
 1724 – 1804  காலப்பகுதியில் இமானுவேல் கான்ட் என்பவரால் 'Critique of Pure reason” என்ற அவரது நூவில் விவரிக்கப்பட்ட இரண்டாகப் பிரிவுறு நிலையை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாக்கத் திட்டம். இப் பகுப்பாக்க முறையில் உலக அறிவானது கருத்துநிலை (தத்துவம்) சார்ந்தது கருத்துநிலையின் கட்டுமானம் (கணிதவியல்) சார்ந்தது என இரு பெரும் பிரிவின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டது. அறிவுப் பிரபஞ்சத்தின் எந்தவொரு கருத்துக்கூறும் இரண்டிரண்டாகப் வகைப்படுத்தப்படுவதே இவரது கோட்பாடாகும். இதன்படி கருத்துநிலை என்ற கருத்துக்கூறானது தூய கருத்துநிலை Empirical   கருத்துநிலை என இரண்டாகவும், தூய கருத்து நிலை திறனாய்வு, அதீத பௌதிகம் என மேலும் இரண்டாகவும் இவ்வாறே ஒன்றிலிருந்து பிரியும் கருத்துக்கூறு ஒவ்வான்றும் இவ்விரண்டாக வகைப்படுத்தப்பட்டுக் கொண்டே செல்லும். 

கெகல்ஸ் பகுப்பாக்கம் (Hegel’s  Classification)
1770 – 1831 காலப்பகுதியில் பிரடெரிக் கெகல் என்பவரால் உருவாக்கப்பட்ட அறிவுப் பகுப்பாக்க முறையான இம் முறையில் உலக அறிவானது தர்க்கம், இயற்கை அறிவியல், உள அறிவியல் என்ற மூன்று பெரும் பிரிவின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டது.

கொபஸ் பகுப்பாக்கம் (Hobbes Classification)
1585 - 1679 காலப்பகுதியில் தோமஸ் கொபஸ் என்பவரால் முன்வைக்கப்பட்ட இவ் அறிவுப் பகுப்பாக்க முறையில் உலக அறிவானது இரு பெரும் பிரிவுகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டது.  முதலாவது பிரிவில் இயந்திரவியல், பொறியியல், கட்டிடவியல், கடற்பயணம் போன்ற பொருள்களும்; இரண்டாவது பிரிவின் கீழ் ஒலியியல், இசை போன்றனவும் உள்ளடக்கப்பட்டன. 19ம் நூற்றாண்டிலிருந்து இப்பகுப்பாக்க முறை தத்துவவியலாளர்களினால் அவரவர் தேவைக்கேற்ப விரிவுபடுத்தப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது.


No comments:

Post a Comment