உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமைக்குரியது. கிட்டத்தட்ட 530 மைல் நீளமுள்ள புத்தக இறாக்கைகளில் 130 மில்லியனுக்கும் அதிகமான நூல்களைக் கொண்டது. இதில் 460 மொழிகளில் 29 மில்லியனுக்கதிகமான நூல்கள் மற்றும் ஏனைய அச்சுருவ சாதனங்களும், 2.7 மில்லியன் பதிவுகள், 12 மில்லியன் புகைப்படங்கள், 4.8 மில்லியன் தேசப்படங்கள் 58 மில்லியன் கையெழுத்துப் பிரதிகள் உள்ளடங்கும். 1800இல் அமெரிக்க அதிபர் ஜோன் அடம்ஸ் காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் காங்கிரசின் பயன்பாடுக்கு மட்டுமான நோக்கு நூலகமாக இயங்கியது. 5000 டொலர்கள் மதிப்பில் உருவாக்கப்பட்டு 1814 வரை புதிய தலைநகரான வாஷிங்டனில் இயங்கிய இந் நூலகம் பிரித்தானியப் படைகளினால் முற்றாக அழிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட ஒருமாதத்துக்கிடையில் அக்காலப் பகுதியில் ஓய்வு பெற்ற அமெரிக்க அதிபராக இருந்த தோமஸ் ஜெவ்விரசன் தனது சொந்த நூலகத்தை இதற்கு வழங்கினார். கிட்டத்தட்ட 50 வருட காலமாக அமெரிக்கா சார்ந்த அனைத்துச் சேகரிப்புகளையும் அறிவியல் சார்ந்து கிடைத்தற்கரிய நூல்களையும் கொண்ட இவரின் நூலகம் அமெரிக்காவின் மிகச் சிறந்த நூலகங்களில் ஒன்று எனப் பெயர் பெற்றதொன்று. 1815இல் இவரது 6487 நூல்களுடன் அமெரிக்காவின் தேசிய நூலகத்துக்கான அடித்தளம் இடப்பட்டது. 1897 நவம்பர் 1ம் திகதி இது பொதுசன பயன்பாடுக்காக முதன் முதல் திறந்துவிடப்பட்டது. உலகிலேயே அளவில் மிகப்பெரியதும் விலைமதிப்பற்றதும் பாதுகாப்பானதுமான கட்டிடம் என்ற பெருமை இந்நூலகக் கட்டிடத்துக்குண்டு.
Sunday, October 26, 2014
காங்கிரஸ் நூலகம் (Library of Congress)

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment